Sunday, September 16, 2012
பக்தி என்றால் என்ன?
இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார்கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக் கொள்கிறதோ, பதிவிரதையின் மனமானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகாசமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ. அதுபோல், கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும்.
* இறைவனிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்! நமக்கு அனுக்கிரகம் செய்கிற, கடவுளிடத்தில், தன்னை அறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம் என்று வந்தால் அது வியாபாரமாகி விடும்.
* ஏதோ ஒன்றுக்கொன்று கொடுப்பது போல,""செல்வத்தைக் கொடு, பக்தி செய்கிறேன்,'' என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகிவிடும். அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, சதா ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அதற்கு தான் "பக்தி' என்று பெயர்.
- காஞ்சிப்பெரியவர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment